இந்திய கடற்படை சார்பில் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்த கூட்டு பயிற்சி 

November 15, 2022

இந்திய கடற்படை சார்பில் இன்றும், நாளையும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக கூட்டு பயிற்சி நடைபெறுகிறது. இது தொடர்பாக இந்திய கடற்படையின் கடலோர பாதுகாப்பு படை அதிகாரி கேப்டன் சுனில் மேனன் கூறுகையில், இந்திய கடற்படையின் மேற்கு கடற்படை சார்பில் கடலோர பாதுகாப்பு தொடர்பான கூட்டு பயிற்சி மும்பையில் இன்றும் நாளையும் நடக்கிறது. கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த பயிற்சியில் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் பங்கேற்கின்றன. பயிற்சிகளில் கலந்து கொள்ளும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் […]

இந்திய கடற்படை சார்பில் இன்றும், நாளையும் கடலோர பாதுகாப்பை வலுப்படுத்துவது தொடர்பாக கூட்டு பயிற்சி நடைபெறுகிறது.

இது தொடர்பாக இந்திய கடற்படையின் கடலோர பாதுகாப்பு படை அதிகாரி கேப்டன் சுனில் மேனன் கூறுகையில், இந்திய கடற்படையின் மேற்கு கடற்படை சார்பில் கடலோர பாதுகாப்பு தொடர்பான கூட்டு பயிற்சி மும்பையில் இன்றும் நாளையும் நடக்கிறது. கடலோர பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த பயிற்சியில் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகள் பங்கேற்கின்றன.

பயிற்சிகளில் கலந்து கொள்ளும் பல்வேறு பாதுகாப்பு அமைப்புகளின் ஒருங்கிணைப்பு, தடையற்ற தகவல் தொடர்பு, உளவு துறை தகவல்களை பகிர்ந்துகொள்ளுதல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து பயிற்சியின்போது மதிப்பிடப்படும். மேலும் கடல் வழியாக பயங்கரவாத ஊடுருவல் மற்றும் தாக்குதல் முயற்சிகளை முறியடிக்கும் வகையில் கடலோர பாதுகாப்பு அமைப்புகளின் திறன் சோதிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu