ஏடிபி இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஜோகோவிச் ஏழாவது முறையாக பட்டத்தை வென்றுள்ளார்.
இத்தாலியில் உள்ள துரின் நகரில் தரவரிசையில் முதல் எட்டு இடம் பிடிக்கும் வீரர்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ஏடிபி இறுதி சுற்று எனப்படும் ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது இதில் வீரர்கள் ரெட் கிரீன் என இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மோதி வந்தனர். இதில் லீக் ஆட்டங்களில் முடிவில் அரை இறுதிக்கு தகுதி பெற்ற கிரீன் பிரிவில் ஜோகோவிச் மற்றும் சின்னர் விளையாடினர். ரெட் பிரிவில் கார்லாஸ் அல்காரஸ் மற்றும் டேனியல் மேத்வதேவ் விளையாடினர். போட்டியில் இத்தாலி வீரர் சின்னர் ரஷ்ய வீரரான மேத்வதேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இதில் செர்பியாவை சேர்ந்த ஜோகோவிச் ஸ்பெயின் வீரர் கார்லசை வீழ்த்தி இறுதி போட்டுக்கு முன்னேறினார். இறுதிப்போட்டியில் சின்னர் மற்றும் ஜோகோவிச் மோதியதில் ஜோகோவிச் 6- 3 மற்றும் 6- 3 என்ற நேர் செட் கணக்கில் சின்னரை வீழ்த்தி ஏழாவது முறையாக பட்டத்தை வென்றுள்ளார்.