மணிப்பூரில் கலவரக்காரர்களை கண்டதும் சுட மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூரில் இரு பிரிவினருக்கிடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியதையடுத்து, மாநிலம் முழுவதும் ராணுவம் மற்றும் துணை ராணுவத்தினர் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டுள்ளனர். பாதுகாப்புப் படையினர் மற்றும் போலீஸார் நேற்று முன்தினம் இரவு முழுவதும் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். நிலைமையைக் கட்டுக்குள் வைக்க, வன்முறை ஏற்பட்ட பகுதிகளில் பாதுகாப்புப் படையினரின் கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. மேலும், கலவரக்காரர்களை கண்டதும் சுடுமாறு மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.
மணிப்பூர் முதல்வர் பிரேன் சிங் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், தவறான புரிதல் காரணமாக வன்முறை நேரிட்டுள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்குமாறு மத்திய, மாநில பாதுகாப்புப் படையினருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மக்கள் அமைதிகாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.