புதிதாக 100 கிளைகள் தொடங்க திட்டம் - ஜோஸ் ஆலுக்காஸ் அறிவிப்பு

April 27, 2023

இந்தியா முழுவதும் 100 புதிய கிளைகளை திறக்க ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 5500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும், நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் தூதராக இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்தியாவில் தற்போது உள்ள 50 கிளைகள் மூலமாக 9000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இது மற்ற […]

இந்தியா முழுவதும் 100 புதிய கிளைகளை திறக்க ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, 5500 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. மேலும், நிறுவனத்தின் விளம்பர தூதராக நடிகர் மாதவன் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் தூதராக இணைவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஜோஸ் ஆலுக்காஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “இந்தியாவில் தற்போது உள்ள 50 கிளைகள் மூலமாக 9000 கோடி ரூபாய் வருவாய் ஈட்டப்பட்டு வருகிறது. இது மற்ற தங்க நகை நிறுவனங்களின் வருவாயை விட பன்மடங்கு உயர்வாகும். இந்நிலையில், இந்தியாவின் மிகப்பெரிய சில்லறை விரிவாக்கத் திட்டமாக, 100 கிளைகள் திறக்கப்பட உள்ளது. இந்தியா மட்டுமல்லாது, ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளிலும் கிளைகள் திறக்க திட்டமிடப்பட்டுள்ளது” என்று கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu