ஜம்மு காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து விவகாரம் டிசம்பர் 11 இல் தீர்ப்பு

December 8, 2023

மத்திய அரசு ஜம்மு-காஷ்ம மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதாக 2019-ம் ஆண்டு அறிவித்தது. கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து இருந்தது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன […]

மத்திய அரசு ஜம்மு-காஷ்ம மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 ஐ ரத்து செய்வதாக 2019-ம் ஆண்டு அறிவித்தது.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் மத்திய அரசு ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருந்தது. மேலும் இது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்து இருந்தது. இதனை எதிர்த்து பல்வேறு தரப்பினர் வழக்கு தொடர்ந்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணைகள் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரணை செய்து வந்திருந்தது. இவ்வழக்கில் நீதிபதி சந்திர சூட் தலைமையிலான அமர்வு குழு விசாரணை செய்து வந்தது.16 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்தது. தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் வழங்க இருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu