கஜகஸ்தானில் பனிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் நிலைகுலைந்து போனதால், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகின.
கஜகஸ்தானில், அஸ்தானா-சூசின்ஸ்க் நெடுஞ்சாலை, எப்போதும் பரபரப்பாக இருக்கும். வாகன போக்குவரத்து வழியாக பல வாகனங்கள் திடீரென மோதி விபத்துக்குள்ளாகின. அக்மோலா பிராந்தியத்தில் கோகம் மற்றும் கராடல் கிராமங்களுக்கு மத்தியில் இந்த விபத்து நடந்தது. மோசமான வானிலை மற்றும் பனிப்புயல் காரணமாக வாகன ஓட்டிகள் வாகனங்களை கட்டுப்படுத்த முடியாமல் நிலைகுலைந்து போனதால், 100க்கும் மேற்பட்ட வாகனங்கள் விபத்துக்குள்ளாகி சாலையில் கிடந்தன. இதனால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. போலீசார் சம்பவ இடத்தில் போக்குவரத்தை சீரமைக்க பணியாற்றுகின்றனர். விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள் வெளியிடப்படவில்லை.














