காஞ்சி பட்டு சேலைகளின் விலை உயர்வு

April 26, 2024

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளதால் காஞ்சி பட்டு சேலைகளின் விலை அதிரடியாக உயர்ந்தது. தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளை கோர்த்து செய்யப்படுவதால் காஞ்சி பட்டுக்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தனித்துவம் பெற்றவையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் காஞ்சி பட்டின் வியாபாரம் அதிகமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் இதன் விலை 30% உயர்ந்துள்ளது. காஞ்சி பட்டு சேலைகள் பத்தாயிரத்திலிருந்து 2 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு […]

தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்ந்துள்ளதால் காஞ்சி பட்டு சேலைகளின் விலை அதிரடியாக உயர்ந்தது.

தங்கம் மற்றும் வெள்ளி ஜரிகைகளை கோர்த்து செய்யப்படுவதால் காஞ்சி பட்டுக்கள் 25 ஆண்டுகளுக்கு மேலாக தனித்துவம் பெற்றவையாக திகழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் ஒவ்வொரு ஆண்டும் காஞ்சி பட்டின் வியாபாரம் அதிகமாகவே இருந்து வரும் நிலையில் தற்போது தங்கம் மற்றும் வெள்ளி விலை உயர்வால் இதன் விலை 30% உயர்ந்துள்ளது. காஞ்சி பட்டு சேலைகள் பத்தாயிரத்திலிருந்து 2 லட்சம் வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த விலை உயர்வால் காஞ்சிப்பட்டு சேலைகளின் விற்பனை பாதிக்கப்படும் என உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். மேலும் விற்பனை பாதிக்கப்படும் பட்சத்தில் பட்டு சேலைகள் தேக்கம் அதிகமாகி உற்பத்தியை குறைக்க வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் உற்பத்தியாளர்கள் கூறியுள்ளனர்.

0
1
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu