பழனி முருகன் கோவிலில் கந்த சஷ்டி திருவிழா வருகிற 13-ஆம் தேதி தொடங்குகிறது. பழனி தண்டாயுதபாணி கோவிலில் வருடம் தோறும் கந்த சஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இதில் பல்வேறு இடங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான திருவிழா 13-ஆம் தேதி பகல் 12 மணிக்கு காப்பு கட்டுதல் உடன் தொடங்குகின்றது. இதில் சிகர நிகழ்ச்சியான சூரசமஹாரம் 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து 19ஆம் தேதி திருக்கல்யாணம் நடைபெறுகிறது. இதனால் 18 ஆம் தேதி மலைக்கோவிலில் தங்கரத புறப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. கந்த சஷ்டி விழாவிற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.














