கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் மே மாதத்திற்கான டிக்கெட் முன்பதிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சென்னை - கன்னியாகுமரி இடையே இயக்கப்படும் ரயிலில் முன்பதிவு தொடங்கிய உடனே ரயில் டிக்கெட் அனைத்தும் நிரம்பிவிடும். இது தக்கல் டிக்கெட்டை பொறுத்தவரை ரயில் பயணத்தில் முந்தைய நாள் முன்பதிவு செய்யப்படும். இதனால் பெரும்பாலானோருக்கு டிக்கெட் கிடைக்காத நிலை உள்ளது. பண்டிகை காலங்கள், கோடை விடுமுறை தினங்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டியில் கூட்டம் அதிகமாக காணப்பட்டு வருகின்றன. கோடை விடுமுறையான மே மாதத்தில் முன்பதிவு செய்வதற்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பலரும் முயற்சி செய்து வந்தாலும் முன்பதிவு செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது. மேலும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில்களில் மே மாதத்திற்கான டிக்கெட்டுகள் பெரும்பாலும் நிரம்பி விட்டன. தற்போது கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மே 2 இரண்டாம் தேதி வரை மட்டுமே முன்பதிவு செய்யும் நிலை உள்ளது. இதனால் பயணிகள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.