இதில் தற்போது நடைமுறையில் இருக்கும் குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் என்ற சட்டத்தின் கீழ் பெரும்பாலான குற்றச் செயல்கள் வழக்கு பதிவு செய்யப்பட்டு தண்டனை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மூன்று புதிய மசோதாக்களை மத்திய அரசு உருவாக்கியுள்ளது.
தற்கால தேவைகளை கருத்தில் கொண்டு இந்த மசோதாக்களை தாக்கல் செய்துள்ளனர். இந்த மசோதாகளின் நோக்கம் நீதி அளிப்பதுதான். தண்டனை அளிப்பது அல்ல என்னும் நோக்கத்தில் மட்டுமே உருவாக்கப்பட்டது என்று அமித்ஷா கூறியுள்ளார்.
இந்த மசோதாக்கள் குறித்து மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞரும் ஆன கபில் சிபில், அரசியலுக்காக காவல்துறையை தவறாக பயன்படுத்துவது நாட்டின் பிரச்சனை. எங்கெல்லாம் பா.ஜா.க ஆட்சி நடைபெறுகிறதோ அங்கெல்லாம் எதிர்க்கட்சிகள் தாக்கப்படும். மேலும் அரசியல் பிரமுகர்களின் வழிகாட்டுதல் படி காவல்துறை பெருமளவில் செயல்படுகிறது என்று விமர்சித்துள்ளார்.














