கர்நாடகா தேர்தல்- காலை 11 மணி வரை 20.99 சதவீதம் வாக்குகள் பதிவு

கர்நாடகா தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர். அதன்படி காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. […]

கர்நாடகா தேர்தலில் காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது.

கர்நாடகாவில் இன்று சட்டசபை தேர்தல் நடைபெற்று வருகிறது. காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. காலை முதலே பல்வேறு கட்சி தலைவர்களும், பிரபலங்களும், பொது மக்களும் வாக்களித்து வருகின்றனர். அதன்படி காலை 9 மணி நிலவரப்படி 7.55 சதவீதம் வாக்குகள் பதிவாகியது. காலை 11 மணி நிலவரப்படி 20.99 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளன. இதில் அதிகபட்சமாக உடுப்பி மாவட்டத்தில் 30.26 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் 16.77 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. 224 தொகுதிகளில் 58,545 வாக்குச்சாவடிகளில் வாக்குகள் பதிவாகி வருகின்றன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu