சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் பூர்த்தி செய்யாததால், ஆகஸ்ட் 5-ந் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகத்தில் உள்ள நான்கு அரசு பஸ் போக்குவரத்து கழகங்களில் 25,000-க்கும் மேற்பட்ட பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில் 1½ லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில மாதங்களாக சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை அரசு நிறைவேற்றவில்லை என ஊழியர்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதையடுத்து போக்குவரத்து ஊழியர் சங்கம் ஆலோசனை நடத்தி, ஆகஸ்ட் 5-ம் தேதி காலை 6 மணி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனால் மாநிலத்தில் பஸ் சேவையில் பாதிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.