கர்நாடகத்தில் பைக் டாக்ஸி சேவைக்கு போக்குவரத்துத் துறை விதித்த தடையை ஐகோர்ட் செல்லுபடியாக உள்ளதாக உறுதி செய்துள்ளது. இதையடுத்து ஜூன் 16 முதல் பைக் டாக்ஸி சேவை நிறுத்தப்படவுள்ளது.
மனுதாரர்கள், இது சுற்றுச்சூழலுக்கு ஏற்றது என்றும், விதிமுறைகளை மாற்றினால் சேவையை தொடரலாம் என்றும் வாதிட்டனர். அரசு தரப்பில், இரண்டு சக்கர வாகனங்களை வாடகை சேவைக்கு மாற்ற முடியாது என்றும், இது இந்தியாவின் வெறும் 8 மாநிலங்களில் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாக விளக்கப்பட்டது. நீதிமன்றம், விசாரணையை ஜூன் 24க்கு ஒத்திவைத்து, மத்திய மற்றும் மாநில அரசுகளிடம் விளக்கம் கோரியுள்ளதுடன், தற்காலிக தடையை மறுத்துவிட்டது.