ககன்யான் திட்டத்துக்கான கலம் - இஸ்ரோவிடம் கே சி பி நிறுவனம் ஒப்படைப்பு

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இந்த திட்டத்தில், மனிதர்களை சுமந்து செல்வதற்கான கலம் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கே சி பி நிறுவனத்தின் ஹெவி இன்ஜினியரிங் பிரிவு இந்த கலத்தை தயாரித்து இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது. ககன்யான் கலம் குறித்த விவரங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இது 3.1 மீட்டர் விட்டம் மற்றும் 2.6 மீட்டர் உயரம் கொண்ட கலமாகும். இதன் எடை 3120 கிலோகிராம் ஆகும். இது அலுமினியம் உலோகத்தால் ஆனது. […]

மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தில் இஸ்ரோ பணியாற்றி வருகிறது. இந்த திட்டத்தில், மனிதர்களை சுமந்து செல்வதற்கான கலம் இஸ்ரோவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னையை சேர்ந்த கே சி பி நிறுவனத்தின் ஹெவி இன்ஜினியரிங் பிரிவு இந்த கலத்தை தயாரித்து இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது.
ககன்யான் கலம் குறித்த விவரங்களை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. இது 3.1 மீட்டர் விட்டம் மற்றும் 2.6 மீட்டர் உயரம் கொண்ட கலமாகும். இதன் எடை 3120 கிலோகிராம் ஆகும். இது அலுமினியம் உலோகத்தால் ஆனது. இந்த மொத்த கலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாகங்கள் உள்ளன. இந்த கலத்தின் புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது. தொடர்ந்து, ககன்யான் திட்டத்திற்கான பல்வேறு பரிசோதனைகளில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu