கென்யாவில் நிதி மசோதா திரும்பப் பெறப்பட்டுள்ளது.
கென்யாவில் நிதி மசோதாவை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு காரணம் நிதி மசோதாவில் அறிவிக்கப்பட இருந்த வரி உயர்வு ஆகும். போராட்டக்காரர்கள் நாடாளுமன்றம் நோக்கி பேரணியாக சென்று தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். அதனை தொடர்ந்து போராட்டக்காரர்கள் நாடாளுமன்றத்திற்கு தீ வைத்தனர். இதே போல் பல்வேறு நகரங்களில் போராட்டம் நடைபெற்றது. எனவே சில புதிய வரிகள் திரும்ப பெறப்படும் என அரசு அறிவித்தது. என்றபோதிலும் போராட்டத்தின் தீவிரம் குறையவில்லை. இந்த மோதலில் போராட்டக்காரர்கள் 27 பேர் பலியாகினர். இதனை தொடர்ந்து கென்ய அதிபர் வில்லியம் ருடோ வரி உயர்வுக்கான நிதி மசோதாவை திரும்ப பெறுவதாக அறிவித்தார். என்றபோதிலும் போராட்டக்காரர்கள் 10 லட்சம் பேர் பேரணியாக செல்ல முடிவெடுத்துள்ளனர்.














