கேரளா மாநிலத்தில் கிறிஸ்தவ சபையினர் கூட்டத்தின் போது குண்டுவெடிப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமசேரி பகுதியில் யோகாவின் சாட்சிகள் என்ற கிறிஸ்தவ சபையினர் ஜெபக்கூட்டம் நடைபெற்றது. இதில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். அங்கு திடீரென அடுத்தடுத்து குண்டுகள் வெடித்தன. இந்த குண்டுவெடிப்பில் மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்தது சிறிது நேரத்திலேயே கொச்சியை சேர்ந்த டொமினிக் மார்ட்டின் என்பவர் சமூக வலைதளத்தில் வீடியோ வெளியிட்டு போலீசில் அவர் சரணடைந்தார். அவரிடம் போலீசார், என். ஐ.ஏ, மத்திய பாதுகாப்பு படை, பயங்கரவாத எதிர்ப்பு படை போன்ற அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர் கிறிஸ்தவ சபையில் ஊழியராக பணிபுரிந்ததாகவும் அதன் நடவடிக்கை பிடிக்காததால் வெளியேறிவிட்டதாகவும் தெரிவித்தார். மேலும் பலமுறை சபையின் செயல்பாட்டை நிறுத்தும் படி எச்சரிக்கை செய்தும் நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் வெடிகுண்டுகளை வெடிக்க வைக்க செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். இவர் வெடி மருந்துகளை தானே
கொச்சியில் இருந்து வாங்கி பின்னர் யூடியூப் மூலம் மாடியில் வைத்து இதனை தயார் செய்து சம்பவ இடத்திற்கு சென்று திட்டமிட்டபடி குண்டுகளை வெடிக்க செய்து இருக்கிறார். மேலும் இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பதை குறித்து என். ஐ.ஏ.அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இவர் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவரிடம் தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.