மேம்படுத்தப்பட்ட கியா செல்டோஸ் வாகனம் வெளியீடு

July 5, 2023

கியா வாகன நிறுவனம் இந்தியாவில் செல்டோஸ் என்ற எஸ்யூவி ரக வாகனத்தை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த வாகன மாடலின் மேம்படுத்தப்பட்ட வாகனம் ஜூலை 4ம் தேதி முதல் வெளியிடப்படுகிறது. வரும் ஜூலை 14ஆம் தேதி முதல் இந்த வாகனத்திற்கான முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் விலை 10.9 லட்சம் முதல் 19.9 லட்சம் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது. […]

கியா வாகன நிறுவனம் இந்தியாவில் செல்டோஸ் என்ற எஸ்யூவி ரக வாகனத்தை விற்பனை செய்து வருகிறது. தற்போது இந்த வாகன மாடலின் மேம்படுத்தப்பட்ட வாகனம் ஜூலை 4ம் தேதி முதல் வெளியிடப்படுகிறது. வரும் ஜூலை 14ஆம் தேதி முதல் இந்த வாகனத்திற்கான முன்பதிவு தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் முதல் இது பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கிடைக்கும் என கூறப்பட்டுள்ளது. இந்த வாகனத்தின் விலை 10.9 லட்சம் முதல் 19.9 லட்சம் வரை இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

மேம்படுத்தப்பட்ட கியா செல்டோஸ் வாகனம், வோல்க்ஸ்வேகன் நிறுவனத்தின் டைகூன், ஸ்கோடா நிறுவனத்தின் குஷாக், ஹூண்டாய் நிறுவனத்தின் க்ரீட்டா, எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஆஸ்டர், கிராண்ட் விட்டாரா மற்றும் விரைவில் வெளியாக உள்ள ஹோண்டா எலிவேட் ஆகிய வாகனங்களுக்கு போட்டியாக அமையும் என்று கருதப்படுகிறது. பழைய கியா செல்டோஸ் வாகனத்தை விட, இதில் உட்புற மற்றும் வெளிப்புற வடிவமைப்புகளில் மாறுதல்கள் உள்ளன. அத்துடன், பாதுகாப்பு மற்றும் ஓட்டுதல் சார்ந்த நவீன அம்சங்கள் புதிதாக இடம்பெற்றுள்ளன. மேலும், இதில் சன் ரூப் இடம்பெறுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu