ரயில் மார்க்கத்தில் ரஷ்யா செல்லும் கிம் ஜான் உன்

September 12, 2023

வடகொரியா அதிபர் கிம் ஜான் உன், ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க புறப்பட்டுள்ளார். ரயில் மார்க்கமாக ரஷ்யா செல்லும் அவர், இன்று புதினை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1180 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. ஆனால், கிம் ஜான் உன், விமானத்தை தவிர்த்து ரயில் பயணத்தில் ஈடுபட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த நிலையில், அவர் பயணம் செய்யும் ரயில், 20 பெட்டிகளை கொண்ட கவச ரயில் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், […]

வடகொரியா அதிபர் கிம் ஜான் உன், ரஷ்ய அதிபர் புதினை சந்திக்க புறப்பட்டுள்ளார். ரயில் மார்க்கமாக ரஷ்யா செல்லும் அவர், இன்று புதினை சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகொரியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே 1180 கிலோமீட்டர் தொலைவு உள்ளது. ஆனால், கிம் ஜான் உன், விமானத்தை தவிர்த்து ரயில் பயணத்தில் ஈடுபட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பி உள்ளது. இந்த நிலையில், அவர் பயணம் செய்யும் ரயில், 20 பெட்டிகளை கொண்ட கவச ரயில் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், வெடிகுண்டு துளைக்க முடியாத படியும், ராக்கெட் லாஞ்சரால் தாக்கி அழிக்க முடியாத படியும் வடிவமைக்கப்பட்டுள்ளதாக, கூறப்படுகிறது. இது தவிர, ரயிலை நோக்கி வரும் ஏவுகணைகளைக் கூட, வழிமறித்து தாக்கும் திறன் இந்த ரயிலில் உள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த ரயில் 50 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும் எனவும், தண்டவாளத்துக்கு ஏற்ற வகையில் சக்கரங்களை மாற்றி அமைக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியா ஆயுதங்களை வழங்கலாம் என ஏற்கனவே அமெரிக்க தெரிவித்திருந்தது. அந்த செய்தியை உண்மையாக்கும் வகையில், இருநாட்டு அதிபர்களின் சந்திப்பு நடைபெறுகிறது. அத்துடன், கிம் ஜான் உன் பயணிக்கும் இந்த ரயிலில், வடகொரிய மூத்த அதிகாரிகள் உடன், ரஷ்யாவுக்கு தேவையான ஆயுதங்களும் கொண்டு செல்லப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. கிம் ஜான் உன் - இன் ரஷ்ய பயணம் சர்வதேச அரசியலில் மிக முக்கிய திருப்பு முனையாக அமையும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu