ரஷ்யா சென்றுள்ள வட கொரிய அதிபர் கிம் ஜான் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை நேரில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.சர்வதேச அளவில், வடகொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நிலையில், அந்த நாடுகளின் அதிபர்கள் சந்திப்பு நடைபெறுவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ரஷ்ய விண்வெளி மையத்தின் பகுதியில் நடைபெற்ற தலைவர்களின் சந்திப்பு சார்ந்த புகைப்படங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. மேலும், இந்த சந்திப்பின்போது, உக்ரைன் போரில் ரஷ்யாவுக்கு தேவையான ஆயுத உதவிகளை வடகொரியா வழங்குவதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகும் என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. இது உலக அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என கருதப்படுகிறது.