ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் கே கே ஆர் 2000 கோடி முதலீடு

September 12, 2023

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான முதலீட்டு நிறுவனம் கே கே ஆர் ஆகும். இந்த நிறுவனம், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வணிகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், 2069.50 கோடி ரூபாயை கே கே ஆர் முதலீடு செய்ய உள்ளது. இது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் 0.25% பங்குகளாக கூறப்படுகிறது. கே கே ஆர் நிறுவனம், ஏற்கனவே […]

சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான முதலீட்டு நிறுவனம் கே கே ஆர் ஆகும். இந்த நிறுவனம், ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் கிட்டத்தட்ட 2000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ரிலையன்ஸ் குழுமத்தின் சில்லறை வணிகப் பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில், 2069.50 கோடி ரூபாயை கே கே ஆர் முதலீடு செய்ய உள்ளது. இது ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தின் 0.25% பங்குகளாக கூறப்படுகிறது. கே கே ஆர் நிறுவனம், ஏற்கனவே ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளது. அதன்படி, தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய முதலீட்டையும் இணைத்து, 1.42% ரிலையன்ஸ் ரீடைல் பங்குகள் கே கே ஆர் வசம் உள்ளன. ரிலையன்ஸ் ரீடைல் நிறுவனம் திட்டமிட்டுள்ள விரிவாக்கப் பணிகளுக்கு, இந்த முதலீடு மிகவும் துணைப் புரிவதாக இருக்கும் என கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu