கோடக் மகேந்திரா வங்கி ஆன்லைனில் வாடிக்கையாளர்களை சேர்க்க தடை

April 25, 2024

கோடக் மகேந்திரா வங்கிக்கு ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கும் புதிய கிரடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது. கோடக் மகேந்திரா வங்கி கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்து நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க தவறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் ரிசர்வ் வங்கி ஆன்லைனில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் தடை விதித்துள்ளது. […]

கோடக் மகேந்திரா வங்கிக்கு ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கும் புதிய கிரடிட் கார்டுகளை வழங்கவும் ரிசர்வ் வங்கி தடை விதித்துள்ளது.

கோடக் மகேந்திரா வங்கி கடந்த 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் ரிசர்வ் வங்கியால் வழங்கப்பட்ட திருத்து நடவடிக்கை விதிமுறைகளை தனது ஐடி கட்டமைப்பில் கடைபிடிக்க தவறி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தகவல் பாதுகாப்பு குற்றச்சாட்டு அடிப்படையில் ரிசர்வ் வங்கி ஆன்லைனில் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கவும் புதிய கிரெடிட் கார்டுகளை வழங்கவும் தடை விதித்துள்ளது. இந்த தடையால் தற்போது இந்த வங்கியில் உலல் வாடிக்கையாளர்கள், வாடிக்கையாளர்களின் பணம், வாடிக்கையாளர்களின் சேவை ஆகியவற்றில் எவ்வித பாதிப்பும் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த தடையால் கோடக் மகேந்திரா வங்கியின் வளர்ச்சியை பாதிக்கும் என சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த வங்கி பெரும்பாலான புதிய வாடிக்கையாளர்களை ஆன்லைன் வாயிலாகவும் மொபைல் சேவை வாயிலாகவும் தான் பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu