கிரீஸில் கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் மீண்டும் பிரதமராகிறார்.
ஐரோப்பிய நாடான கிரீசில் புதிய ஜனநாயக கட்சியின் தலைவரான கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. இவர் கடந்த 4 ஆண்டுகளாக பிரதமராக பதவி வகித்து வருகிறார். தொலைபேசி உரையாடல் ஒட்டு கேட்பு விவகாரம், பிப்ரவரி மாதம் நடந்த மிகப்பெரிய ரெயில் விபத்து போன்றவற்றால் இவரது ஆட்சி விமர்சனத்துக்குள்ளானது. இதனால் பிரதமர் கிரியாகோஸ் பொதுத்தேர்தலுக்கு மீண்டும் அழைப்பு விடுத்திருந்தார். அதன்படி கடந்த மே 21-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. தேர்தலில் வெற்றி பெற 300 தொகுதிகளை கொண்ட அந்த நாட்டில் 151 இடங்களை பெற வேண்டும். ஆனால் எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை பெறவில்லை. இதனால் கடந்த 5 வாரங்களில் இரண்டாவது முறையாக அங்கு பொதுத்தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் ஆளும் புதிய ஜனநாயக கட்சி வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்துள்ளது. மொத்தமுள்ள 300 இடங்களில் 158 இடங்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிரீஸில் இடண்டாவது முறையாக கிரியாகோஸ் மிட்சோடாகிஸ் பிரதமராக பதவியேற்க உள்ளார்.