மானாமதுரை அருகே பிற்கால பாண்டியர் கால சிலைகள் கண்டுபிடிப்பு

November 15, 2022

மானாமதுரை அருகே பிற்கால பாண்டியர் கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மானாமதுரை அருகே கிள்ளுகுடி கிராமத்தில் பழமையான சிலைகள் இருப்பதாக, அவ்வூரைச் சேர்ந்த முத்துராஜா என்பவர் கொடுத்த தகவலின்படி அங்கு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் இரு சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பெருமாள் சிலை மூன்றரை அடி உயரம் கொண்ட தனி கல்லில் சிலையாக செதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிலையானது முட்டிக்கு கீழே உள்ள பகுதி மட்டுமே உள்ளது. இந்த சிலையில் ஆடை கெண்டைக்கால் வரை செதுக்கப்பட்டுள்ளது. அதே […]

மானாமதுரை அருகே பிற்கால பாண்டியர் கால சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மானாமதுரை அருகே கிள்ளுகுடி கிராமத்தில் பழமையான சிலைகள் இருப்பதாக, அவ்வூரைச் சேர்ந்த முத்துராஜா என்பவர் கொடுத்த தகவலின்படி அங்கு ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வில் இரு சிலைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், பெருமாள் சிலை மூன்றரை அடி உயரம் கொண்ட தனி கல்லில் சிலையாக செதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு சிலையானது முட்டிக்கு கீழே உள்ள பகுதி மட்டுமே உள்ளது. இந்த சிலையில் ஆடை கெண்டைக்கால் வரை செதுக்கப்பட்டுள்ளது. அதே போல் இரண்டு கால்களிலும் தண்டை அணிந்தபடியும் செதுக்கப்பட்டுள்ளது.

எனவே இவை பிற்கால பாண்டியர் காலத்தைச் சேர்ந்த பெருமாள் மற்றும் ஸ்ரீதேவி சிலைகளாக இருக்கக்கூடும். இந்த இரு சிலைகளும் ஒரே காலத்தையும், ஒத்த வடிவமைப்பையும் கொண்டுள்ளது. மேலும், இந்த பகுதியில் ஒரு பழமையான பிற்கால பாண்டியரின் பெருமாள் கோயில் இருந்திருக்க வேண்டும். பின்னர் கால ஓட்டத்தில் அந்த கோயில் அழிந்திருக்கக்கூடும் என்றனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu