குழந்தை தடுப்பூசி திட்டத்திற்காக 'யு - வின்' செயலி அறிமுகம்

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியருக்கான தடுப்பூசி விபரங்களுக்காக 'யு - வின்' என்ற செயலி சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது குறித்து 'யுனிசெப்' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியத்தின் இந்திய பிரிவு சுகாதார அதிகாரி டாக்டர் மங்கேஷ் கதாரி கூறுகையில், நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியருக்கான தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2.6 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. மேலும் 2.9 கோடி கர்ப்பிணியர் உள்ளனர். இவர்களில் பலர் […]

குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியருக்கான தடுப்பூசி விபரங்களுக்காக 'யு - வின்' என்ற செயலி சோதனை முயற்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து 'யுனிசெப்' எனப்படும் ஐக்கிய நாடுகள் சபையின் குழந்தைகள் நிதியத்தின் இந்திய பிரிவு சுகாதார அதிகாரி டாக்டர் மங்கேஷ் கதாரி கூறுகையில், நம் நாட்டில் குழந்தைகள் மற்றும் கர்ப்பிணியருக்கான தடுப்பூசி திட்டத்தை மேம்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 2.6 கோடி குழந்தைகள் பிறக்கின்றன. மேலும் 2.9 கோடி கர்ப்பிணியர் உள்ளனர். இவர்களில் பலர் குறிப்பிட்ட நாட்களில் முறையாக தடுப்பூசி செலுத்துவது இல்லை என்ற புகார் இருக்கிறது.

இவர்களை கண்காணித்து தடுப்பூசி செலுத்துவதற்காக புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு 'யு - வின்' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கோவின் போலவே இதுவும் செயல்படும். குழந்தைகள், கர்ப்பிணியர் தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதிகள் முறைப்படி இதில் பதிவு செய்யப்படும். இதிலிருந்து தடுப்பூசி சான்றிதழையும் பதிவு செய்ய முடியும் என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu