ஓயோ நிறுவனத்தின் கார்பரேட் தொழில்நுட்ப பிரிவில், 600 பேர் பணி நீக்கம்

December 3, 2022

ஓயோ நிறுவனத்தின் கார்ப்பரேட் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் 600 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது. ஓயோ நிறுவனத்தில், தற்போது 3700 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் 10% பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கார்ப்பரேட் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 600 பேருக்கு பிங்க் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில், நிர்வாகப் பிரிவில் 250 பேர் புதிதாக பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஓயோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரித்தேஷ் […]

ஓயோ நிறுவனத்தின் கார்ப்பரேட் தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் 600 பேர் பணிநீக்கம் செய்யப்படுவதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஓயோ நிறுவனத்தில், தற்போது 3700 பேர் பணியாற்றி வருகின்றனர். அதில் 10% பணியாளர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாக சனிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, கார்ப்பரேட் தொழில்நுட்ப பிரிவில் உள்ள 600 பேருக்கு பிங்க் ஸ்லிப் வழங்கப்பட்டுள்ளது. அதே வேளையில், நிர்வாகப் பிரிவில் 250 பேர் புதிதாக பணியமர்த்தப்பட உள்ளதாகவும் அறிவிப்பு வெளியாகி உள்ளது.

ஓயோ நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ரித்தேஷ் அகர்வால், “பணியில் இருந்து நீக்கப்படும் பணியாளர்களுக்கு எங்களால் இயன்ற வரையில், தகுந்த சன்மானம் வழங்கப்படும்” என தெரிவித்துள்ளார். மேலும், அவர்களுக்கான எதிர்கால பணி உறுதி செய்யப்பட்டு வெளியேற்றப்படுவர் எனவும் கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu