இந்தியாவைச் சேர்ந்த மென்பொருள் தயாரிப்பு நிறுவனமான ஃப்ரெஷ்வொர்க்ஸ், தனது 2% ஊழியர்களை பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.
ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனம், அமெரிக்க பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள 2வது இந்திய நிறுவனம் ஆகும். இது, பல்வேறு அமெரிக்க நிறுவனங்கள் மற்றும் நபர்களுக்கு, மென்பொருள் தயாரிப்புகளை வடிவமைத்து வழங்கி வருகிறது. இந்த நிறுவனத்தின் கடந்த காலாண்டு வருவாய் 37% உயர்ந்து பதிவாகியுள்ளது. இந்நிலையில், நிறுவனத்தின் நிர்வாக பதவிகள் மாற்றியமைக்கப்பட உள்ளதாக அறிவிப்பு வெளிவந்துள்ளது.
நிறுவனத்தின் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டு, முக்கிய நிர்வாக பொறுப்புகள் மாற்றி அமைக்கப்பட உள்ளன. இது தொடர்பாக, ஆட்குறைப்பு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட உள்ளது. எனினும், திறமையான ஊழியர்களை தக்க வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நம்பப்படுகிறது. ஃப்ரெஷ்வொர்க்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி கிரிஷ் மாத்ருபூதம் இந்த தகவல்களை தெரிவித்துள்ளார்.














