சீனாவின் கணினி தயாரிப்பாளரான லெனோவா நிறுவனத்தின் இந்தியப் பிரிவு விற்பனையில் உயர்வை சந்தித்துள்ளது. கடந்த 2022 ம் நிதியாண்டில், விற்பனை 39% உயர்ந்து, 14484 கோடியாக பதிவாகி உள்ளது. மேலும், நிறுவனத்தின் நிகர லாபம் 216% உயர்ந்து, 186 கோடியாக உள்ளது.
ஒழுங்குமுறை ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ள அறிக்கையில், நிறுவனத்தின் உள்நாட்டு கணினி உற்பத்தி இருமடங்காக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. இது குறித்து, “கணினியின் தேவை குறைந்த போதும், பணவீக்கம் உயர்ந்த போதும், எங்கள் நிறுவனத்தின் வளர்ச்சி சிறப்பாகவே அமைந்தது. குறிப்பாக, முதல் காலாண்டில் 36 சதவீதமும், இரண்டாம் காலாண்டில் 14 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளோம்” என்று லெனோவா இந்தியா நிறுவனத்தின் நிர்வாக அதிகாரி சைலேந்திர கடியால் கூறியுள்ளார்.