டிசம்பர் 3, 2024 அன்று இந்திய பங்குச் சந்தை தொடர்ந்து 3ம் நாளாக வலுவான செயல்பாட்டை காட்டியது. BSE சென்செக்ஸ் மற்றும் Nifty 50 போன்ற முக்கிய குறியீடுகள் கணிசமான அளவு உயர்ந்துள்ளன. குறிப்பாக, வங்கி, உலோகம் மற்றும் எரிசக்தி துறைகளில் உள்ள பங்குகள் அதிக லாபத்தை ஈட்டியுள்ளன. அதானி போர்ட்ஸ் பங்கு மிக அதிகமாக உயர்ந்தது. அதே சமயம், FMCG துறையில் உள்ள பங்குகள் சற்று பின்தங்கியே இருந்தன. பாரதி ஏர்டெல் அதிக நஷ்டம் அடைந்தது. எச்டிஎஃப்சி வங்கியின் பங்கு 1.2% அளவுக்கு உயர்ந்தது.
இன்றைய வர்த்தக நேர முடிவில், BSE சென்செக்ஸ் 597.67 புள்ளிகள் உயர்ந்து 80,845.75 ஆக உள்ளது. Nifty 50, 181.10 புள்ளிகள் உயர்ந்து 24,457.15 ஆக உள்ளது.