லிபியாவில் புயல் காரணமாக இரு அணைகள் உடைந்து ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் லிபியாவில் புயல் காரணமாக டெர்னா நதியின் குறுக்கே கட்டுப்பட்டிருந்த இரு அணைகள் உடைந்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் நீர்வளத் துறையை சேர்ந்த எட்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். அலட்சியம், மேலாண்மை தவறுகள், தவறான முடிவுகள் போன்ற காரணத்தினால் இந்த பேரிடர் ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஏழு பேர் முன்னால் அதிகாரிகள் ஆவர். ஒருவர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகிறார். இந்த தகவலை லிபியா சட்டத்துறை உயர் அதிகாரி அல் சித்திக் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். புயலின்போது இரு அணைகள் உடைந்து வெள்ள நீரில் சிக்கி சுமார் 11 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.














