லிபியா அணை உடைப்பு தொடர்பாக 8 பேர் கைது

September 26, 2023

லிபியாவில் புயல் காரணமாக இரு அணைகள் உடைந்து ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் லிபியாவில் புயல் காரணமாக டெர்னா நதியின் குறுக்கே கட்டுப்பட்டிருந்த இரு அணைகள் உடைந்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் நீர்வளத் துறையை சேர்ந்த எட்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். அலட்சியம், மேலாண்மை தவறுகள், தவறான முடிவுகள் போன்ற காரணத்தினால் இந்த பேரிடர் ஏற்பட்டுள்ளது. […]

லிபியாவில் புயல் காரணமாக இரு அணைகள் உடைந்து ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழந்தது தொடர்பாக 8 அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமீபத்தில் லிபியாவில் புயல் காரணமாக டெர்னா நதியின் குறுக்கே கட்டுப்பட்டிருந்த இரு அணைகள் உடைந்தது. இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் நீர்வளத் துறையை சேர்ந்த எட்டு அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை போலீசார் விசாரித்து வருகின்றனர். அலட்சியம், மேலாண்மை தவறுகள், தவறான முடிவுகள் போன்ற காரணத்தினால் இந்த பேரிடர் ஏற்பட்டுள்ளது. இவர்கள் ஏழு பேர் முன்னால் அதிகாரிகள் ஆவர். ஒருவர் மட்டுமே தற்போது பணியாற்றி வருகிறார். இந்த தகவலை லிபியா சட்டத்துறை உயர் அதிகாரி அல் சித்திக் அறிக்கை மூலம் வெளியிட்டுள்ளார். புயலின்போது இரு அணைகள் உடைந்து வெள்ள நீரில் சிக்கி சுமார் 11 ஆயிரத்துக்கும் மேலானவர்கள் உயிரிழந்ததாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu