எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் 9% அளவில் உயர்ந்துள்ளன. மேலும், வரலாற்றில் முதல் முறையாக, 1000 ரூபாய் மதிப்பை தாண்டி எல்ஐசி நிறுவனத்தின் ஒரு பங்கு வர்த்தகம் ஆகிறது. இன்றைய வர்த்தக நாளின் இடையில் எல் ஐ சி நிறுவனத்தின் ஒரு பங்கு விலை 1028 ரூபாயாக இருந்தது.
கடந்த நவம்பர் மாதம் முதல் எல்ஐசி நிறுவனத்தின் பங்குகள் தொடர் உயர்வை பதிவு செய்து வருகின்றன. கடந்த டிசம்பரில் 22.52% மற்றும் ஜனவரியில் 14% அளவில் நிறுவனத்தின் உயர்வு பதிவானது. கடந்த வருட ஜனவரி மாதத்தில் எல்ஐசி நிறுவனத்தின் ஐ பி ஓ வெளியான நிலையில், சரியாக ஒரு வருடம் கழித்து நிறுவனத்தின் பங்கு மதிப்பு மிகப்பெரிய உயர்வை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.