இன்ஸ்டாகிராமில் லிமிட் இன்டராக்சன்ஸ் அம்சம் அறிமுகம்

இன்ஸ்டாகிராம் செயலியில் லிமிட் இன்டராக்சன்ஸ் அம்சம் புதிதாக வெளியாகி உள்ளது. இதனால் சமூக ஊடகத்தில் ட்ரோல் மற்றும் சீண்டல்களுக்கு ஆளாவது தவிர்க்கப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. சமகால இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் செயலி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் வழியாக ஒருவரை சீண்டலுக்கு உள்ளாக்குவது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்கும் நோக்கில், மெட்டா நிறுவனம் லிமிட் இன்டராக்சன்ஸ் அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட பயனர்களிடம் இருந்து வரும் மெசேஜ்கள் தற்காலிகமாக […]

இன்ஸ்டாகிராம் செயலியில் லிமிட் இன்டராக்சன்ஸ் அம்சம் புதிதாக வெளியாகி உள்ளது. இதனால் சமூக ஊடகத்தில் ட்ரோல் மற்றும் சீண்டல்களுக்கு ஆளாவது தவிர்க்கப்படும் என மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.

சமகால இளைஞர்கள் மத்தியில் இன்ஸ்டாகிராம் செயலி அதிகமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இன்ஸ்டாகிராம் சமூக ஊடகம் வழியாக ஒருவரை சீண்டலுக்கு உள்ளாக்குவது அதிகரித்து வருகிறது. இதனை தவிர்க்கும் நோக்கில், மெட்டா நிறுவனம் லிமிட் இன்டராக்சன்ஸ் அம்சத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, குறிப்பிட்ட பயனர்களிடம் இருந்து வரும் மெசேஜ்கள் தற்காலிகமாக மட்டுமே இருக்கும். ஒரு நாள் முதல் நான்கு வார காலம் வரையில் அதனை காண முடியும். அதன்படி, குறிப்பிட்ட நபர்களிடமிருந்து வரும் செய்திகள், கமெண்ட்கள், ட்ரோல்கள் போன்றவை தவிர்க்கப்படும். இதற்காக, தாங்கள் விரும்பிய அல்லது நெருங்கிய நண்பர்களுடன் மட்டுமே உரையாடல் செய்வதற்கான செட்டிங்ஸ் அம்சம் கொடுக்கப்பட்டுள்ளது. அதனை தேர்வு செய்து, லிமிட் இன்டராக்சன்ஸ் பயன்பாட்டை பெறலாம் என கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu