LMV லைசன்ஸ் கொண்டவர்கள் 7,500 கிலோ எடையுள்ள வாகனங்களை ஓட்ட உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
உச்ச நீதிமன்றம் இலகுரக மோட்டார் வாகன (LMV) லைசன்ஸ் வைத்திருக்கும் நபர்கள், 7,500 கிலோ எடைக்கு மிகாமல் போக்குவரத்து வாகனங்களை ஓட்டுவதற்கு உரிமை உண்டு என உத்தரவிட்டுள்ளது. கார் மற்றும் 4 சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு LMV லைசன்ஸ் அவசியம் என கூறப்படுகிறது. சாலை விபத்துகள் அதிகரிப்பதற்கு LMV லைசன்ஸ் வைத்தவர்கள் தான் காரணம் என குற்றம் சாட்டப்பட்ட நிலையில், நீதிமன்றம் அதற்கான ஆதாரங்களை நிராகரித்து, 7,500 கிலோ எடைக்கு உட்பட்ட வாகனங்களை ஓட்டுவதற்கான உரிமையை வழங்கியுள்ளது.