தேர்தல் முடிவுகள் எதிரொலி - பங்குச் சந்தை வரலாறு காணாத வீழ்ச்சி

June 4, 2024

தேர்தல் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, பாரதிய ஜனதாவுக்கு இன்று மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இடையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 6000 புள்ளிகளுக்கு மேல் இழந்தது. இறுதியில் 4389.73 புள்ளிகளை இழந்து 72079.05 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 1379.41 புள்ளிகள் சரிந்து 21884.5 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. […]

தேர்தல் கருத்துக் கணிப்புகளை பொய்யாக்கி, பாரதிய ஜனதாவுக்கு இன்று மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்திய பங்குச்சந்தை இன்று வரலாறு காணாத வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இன்றைய வர்த்தக நாளின் இடையில், மும்பை பங்குச் சந்தையின் சென்செக்ஸ் குறியீட்டு எண் 6000 புள்ளிகளுக்கு மேல் இழந்தது. இறுதியில் 4389.73 புள்ளிகளை இழந்து 72079.05 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது. அதே சமயத்தில், தேசிய பங்குச் சந்தையின் நிஃப்டி குறியீட்டு எண் 1379.41 புள்ளிகள் சரிந்து 21884.5 புள்ளிகளில் நிறைவடைந்துள்ளது.

இன்றைய வர்த்தகத்தில், அதானி போர்ட்ஸ், அதானி எண்டர்பிரைசஸ், ஓஎன்ஜிசி, என்டிபிசி, பாரத ஸ்டேட் வங்கி, கோல் இந்தியா, பிபிசிஎல், டாடா ஸ்டீல், பவர் கிரிட், எச்டிஎப்சி வங்கி, ஐ சி ஐ சி ஐ வங்கி, ரிலையன்ஸ், எல் அண்ட் டி போன்ற முக்கிய நிறுவனங்கள் வீழ்ச்சி அடைந்துள்ளன. ஹிந்துஸ்தான் யூனிலீவர், நெஸ்லே, பிரிட்டானியா, ஹீரோ மோட்டோகார்ப் டிசிஎஸ் ஆகிய நிறுவனங்கள் ஏற்றம் பெற்றுள்ளன.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu