எகிப்து - காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு இழப்பீடு வழங்க ‘காப் 27’ மாநாட்டில் முடிவு

November 7, 2022

சர்வதேச அளவில், காலநிலை மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகள் நேர்ந்து வருகின்றன. எனவே, கடந்த 1992 ஆம் ஆண்டில் இருந்து, ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவை இது குறித்த திட்டப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சபையில் இடம்பெற்றுள்ள 194 உறுப்பு நாடுகள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, எகிப்து நாட்டில், நவம்பர் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இந்த பேரவையின் 27ஆவது மாநாடு […]

சர்வதேச அளவில், காலநிலை மாற்றத்தால் பல்வேறு பாதிப்புகள் நேர்ந்து வருகின்றன. எனவே, கடந்த 1992 ஆம் ஆண்டில் இருந்து, ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்ற பணித்திட்ட பேரவை இது குறித்த திட்டப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்த சபையில் இடம்பெற்றுள்ள 194 உறுப்பு நாடுகள் பங்கேற்கும் மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு, எகிப்து நாட்டில், நவம்பர் 6 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை இந்த பேரவையின் 27ஆவது மாநாடு - ‘காப் 27’ (COP - Conference of Parties) நடைபெறுகிறது.

நேற்று நடைபெற்ற முதல் நாள் கூட்டத்தில், காலநிலையால் பாதிக்கப்படும் ஏழை நாடுகளுக்கு நிதி மற்றும் இழப்பீடுகளை வழங்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு, அனைத்து உறுப்பு நாடுகளும் ஒப்புதல் வழங்கி உள்ளன. இது வரவேற்கத்தக்க அணுகுமுறையாக பாராட்டுக்களை பெற்றுள்ளது. மேலும், முன்னேற்றத்திற்கான நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

இது குறித்து பேசிய ஐ நா சபையின் காலநிலை மாற்ற குழு தலைவர் சைமன் ஸ்டீல், உலக நாடுகளின் இந்த ஆக்கப்பூர்வமான முடிவுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். மேலும், “ஏற்கனவே, இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட வளரும் நாடுகள், தீவு நாடுகள், ஏழை ஆப்பிரிக்க நாடுகள், பழங்குடி சமூகங்கள், உள்ளிட்டவை, வளர்ந்த நாடுகளிடம் இருந்து காலநிலை மாற்ற பாதிப்புகளுக்கு நிதி உதவி கேட்டிருந்தனர். அதன்படி, இந்த வருட கூட்டத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தயாராக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், உயிரிழப்புகள் மற்றும் பொருளாதார இழப்புகள் குறைக்கப்படும் என நம்புகிறோம்” என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu