ரிலையன்ஸ் ரீடைல் வென்சர்ஸ் நிறுவனம், லோட்டஸ் சாக்லேட் நிறுவனத்தின் 51% பங்குகளை 740 மில்லியன் ரூபாய்க்கு வாங்குவதாக தெரிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதும், வெள்ளிக்கிழமை வர்த்தக நாளில், லோட்டஸ் சாக்லேட் நிறுவனத்தின் பங்குகள் 5% உயர்ந்து வர்த்தகமாகி வருகின்றன.
லோட்டஸ் சாக்லேட் நிறுவனத்தின் பங்குகளை, ஒரு பங்கு 113 ரூபாய் ரிலையன்ஸ் ரீடெய்ல் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ரிலையன்ஸ் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் லிமிடெட் வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், லோட்டஸ் சாக்லேட் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு, 26% பங்குகளை, 3.5% சலுகை விலையில் விற்க வெளிப்படை அறிவிப்பை விடுத்துள்ளது. ரிலையன்ஸ் நிறுவனத்தின் இந்த அறிவிப்பால் நேற்றைய வர்த்தக நாளின் முடிவில், 117.10 ரூபாய்க்கு வர்த்தகமாகி வந்த லோட்டஸ் சாக்லேட் பங்குகள், இன்று ஒரே நாளில் 5% உயர்வை சந்தித்துள்ளன. மேலும், இந்த வாரம் முழுவதும் தொடர்ச்சியாக ஏற்றம் கண்ட லோட்டஸ் சாக்லேட் பங்குகள், மொத்தமாக, 27.5% உயர்வை பதிவு செய்துள்ளன.