லாரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்திருந்த காலவரையற்ற வேலைநிறுத்தம் பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததைத் தொடர்ந்து ரத்து செய்யப்பட்டு, எல்.பி.ஜி. விநியோகம் சீராக நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எல்.பி.ஜி. சிலிண்டர்கள் ஏற்றும் லாரிகளுக்கு ஒப்பந்தப்படி போதிய சரக்கு வழங்க வேண்டும் என்பதைக் கொண்டு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை முதல் வேலைநிறுத்தம் நடத்தப்பட உள்ளது என சங்கம் அறிவித்திருந்தது. இதைத் தொடர்ந்து இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிர்வாகம் மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சமரசம் ஏற்பட்டதால் வேலைநிறுத்தத்தை வாபஸ் பெற லாரி உரிமையாளர்கள் ஒப்புக்கொண்டனர். இதன் மூலம் எல்.பி.ஜி. சிலிண்டர் விநியோகம் தடையின்றி நடைபெறும் என இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைமை பொது மேலாளர் வெற்றி செல்வகுமார் உறுதியளித்துள்ளார்.