சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக மூத்த நீதிபதி எம். துரைசாமி பொறுப்பேற்றுக் கொண்டார்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமித்து குடியரசு தலைவர் உத்தரவிட்டிருந்தார். அதன்படி இன்று நீதிபதி துரைசாமி பொறுப்பு தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றார்.
முந்தைய தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி இடமாற்றம் செய்யப்பட்ட போது பொறுப்பு தலைமை நீதிபதியாக நீதிபதி துரைசாமி பதவி வகித்தார். தற்போது இரண்டாவது முறையாக பொறுப்பு தலைமை நீதிபதி பொறுப்பை ஏற்றுள்ளார். அவர் செப்டம்பர் 21ம் தேதி பணி ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.