எல்ஐசி நிர்வாக இயக்குனராக எம். ஜெகன்நாத் நியமனம்

March 14, 2023

எல்ஐசி நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக எம். ஜெகன்நாத் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் எல்ஐசியைச் சேர்ந்த இவர், எல்ஐசியின் தெற்கு மற்றும் மத்திய மண்டல பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பு வெளிவந்துள்ளது. மேலும், அவரது பணிக்காலம் உடனடியாகத் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1988 ஆம் ஆண்டு, இவர் எல்ஐசி யில் பணியில் சேர்ந்தார். அப்போதிலிருந்து நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருக்கு, அனைத்து பிரிவுகளிலும் தேர்ந்த அனுபவம் […]

எல்ஐசி நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக எம். ஜெகன்நாத் இன்று நியமிக்கப்பட்டுள்ளார். ஹைதராபாத் எல்ஐசியைச் சேர்ந்த இவர், எல்ஐசியின் தெற்கு மற்றும் மத்திய மண்டல பிரிவு மேலாளராக பணியாற்றி வந்தார். இவர் தற்போது நிறுவனத்தின் நிர்வாக இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளதாக செய்தி குறிப்பு வெளிவந்துள்ளது. மேலும், அவரது பணிக்காலம் உடனடியாகத் தொடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1988 ஆம் ஆண்டு, இவர் எல்ஐசி யில் பணியில் சேர்ந்தார். அப்போதிலிருந்து நிறுவனத்தில் பணியாற்றி வரும் அவருக்கு, அனைத்து பிரிவுகளிலும் தேர்ந்த அனுபவம் உள்ளதாக சொல்லப்படுகிறது. மேலும், இவர் இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் இலங்கை ஆகிய பகுதிகளில் எல்ஐசி அலுவலராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu