ரூ.284 கோடி செலவில் கட்டப்பட்ட 2,828 குடியிருப்புகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.20 கோடியே 13 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 12 புதிய தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் மற்றும் 4 தரம் உயர்த்தப்பட்ட தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் ஆகியவற்றை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் கீழ் செயல்படும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் ரூ. 284.32 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 2,828 குடியிருப்புகளை திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 330 பயனாளிகளுக்கு குடியிருப்புகளுக்கான ஒதுக்கீடு ஆணைகள், 5430 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் மற்றும் 518 பயனாளிகளுக்கு அடுக்குமாடி மற்றும் மனைகளுக்கான உரிமை ஆவணங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.