பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆலோசனை

March 13, 2023

பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார். மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலக வளாகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை, 6 எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு […]

பட்ஜெட்டில் அறிவிக்கப்படவுள்ள திட்டங்கள் குறித்து அமைச்சர், அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

மார்ச் 20ம் தேதி தமிழ்நாடு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில் முதலமைச்சர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை தலைமை செயலக வளாகத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு, துறை சார்ந்த செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.

கூட்டத்தில் பல்வேறு துறை சார்ந்த 68 திட்டங்களின் தற்போதைய நிலை, 6 எதிர்கால திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. சிறப்பு திட்ட செயலாக்கத்துறையின் செயல்பாடுகள், பட்ஜெட்டில் அறிவிக்கப்பட உள்ள புதிய திட்டங்கள் குறித்து விவாதம் நடத்தப்பட்டு வருகிறது. குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமைத்தொகை, ஏற்கனவே நடைமுறையில் உள்ள திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்ட வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu