தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போலீஸ் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் மாடி கூட்ட அரங்கில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த ஆலோசனை கூட்டத்தை நடத்தினார். இதில் தலைமை செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்திரரெட்டி, போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திர பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்தில் நிலவும் சட்டம் ஒழுங்கு பிரச்சினை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. எந்தெந்த மாவட்டங்களில் குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது என்பது பற்றியும் அதை கட்டுப்படுத்த என்னென்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது என்றும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது.