ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகளை, தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம் உருவாக்கி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில், இதன் விரிவாக்கப் பணியை பாக்ஸ்கான் மேற்கொண்டு வருகிறது. அதன்படி, ஏர்பாட் உற்பத்திக்காக, தெலுங்கானா மாநிலத்தில் 200 மில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. இதன் மூலம், இந்தியாவில் தயாரிக்கப்படும் ஏர்பாட்கள் இந்தியாவிலேயே விற்பனைக்கு வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனினும், ஏர்பாட்களுக்கான விலை குறித்த தகவல் வெளிவரவில்லை
இவ்வருடத்தின் பிற்பகுதியில், தெலுங்கானா மாநிலத்தில், ஏர்பாட் உற்பத்தி ஆலை கட்டமைக்கும் பணி தொடங்கப்படும் என்று பாக்ஸ்கான் தெரிவித்துள்ளது. மேலும், 2024 ஆம் ஆண்டில், விரைவாக உற்பத்தி தொடங்கப்படும் எனவும் கூறியுள்ளது. பாஸ்கான் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு, நிறுவனத்தின் பங்குகளை 9% வரை உயர்த்தியுள்ளது.














