மேட்ரிட் ஓபன் டென்னிஸ்: சபலன்கா, ரிபாகினா அரை இறுதிக்கு முன்னேற்றம்

மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் சபலன்கா, ரிபாகினா அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர். ஸ்பெயினில் மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலன்கா, ரஷ்ய வீராங்கனை மீரா ஆன்டிரிவா ஆகியோர் மோதினர். இதில் சபலன்கா 6-1,6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். அதனைத் தொடர்ந்து மற்றொரு ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, […]

மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் சபலன்கா, ரிபாகினா அரை இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

ஸ்பெயினில் மேட்ரிட் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதி ஆட்டத்தில் பெலாரசின் அரினா சபலன்கா, ரஷ்ய வீராங்கனை மீரா ஆன்டிரிவா ஆகியோர் மோதினர். இதில் சபலன்கா 6-1,6-4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறி உள்ளார். அதனைத் தொடர்ந்து மற்றொரு ஆட்டத்தில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, யூலியா புதின் சேவாவுடன் மோதினார். இதில் ரிபாகினா 4-6,7-6,(7-4),7-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளார். நாளை நடைபெற உள்ள அறை இறுதியில் ரிபாகினா, சபலன்கா மோத உள்ளனர்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu