மகாராஷ்டிராவில் கனமழையின் காரணமாக ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை முதல் மிக கனமழை வாய்ப்பிருப்பதால் ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு உள்ள கொங்கன் பகுதியில் உள்ள தானே,பால்கர், இராய்காட், ரத்னகிரி மற்றும் சிந்துதுர்க் மாவட்டங்களுக்கும் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து மழை பெய்து வருவதால் மும்பையில் உள்ள அந்தேரி சுரங்க பாதையில் வெள்ளநீர் பெருக்கெடுத்து வாகன போக்குவரத்து தடை ஏற்பட்டு பயணிகள் சிரமம் அடைந்து வருகின்றனர்.