மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் சட்டசபை தேர்தலுக்கான தேதிகள் இன்று அறிவிக்கப்பட்டன. அதன்படி மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கு, நவம்பர் 20-ம் தேதி தேர்தல் நடைபெறும். மேலும் ஜார்க்கண்டில், இரண்டு கட்டங்களில் நவம்பர் 13 மற்றும் 20-ம் தேதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது. மகாராஷ்டிராவில், ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா-பாஜக கூட்டணி ஆட்சி செய்கிறது, ஜார்க்கண்டில், ஹேமந்த் சோரன் தலைமையிலான கட்சிகள் உள்ளன. இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் நவம்பர் 23-ம் தேதி எண்ணப்படும்.














