புனேயில் மின்சார வாகன உற்பத்தி ஆலை அமைப்பதற்கு 10000 கோடி முதலீடு - மஹிந்திரா நிறுவனம் அறிவிப்பு

December 15, 2022

வாகனத் துறையில், இந்தியாவின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா, புனேவில் மின்சார வாகன உற்பத்தி நிலையம் அமைக்க உள்ளது. இதற்காக, 10000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இது, மகாராஷ்டிரா மாநில அரசின், தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் ஆகும். இந்தத் திட்டத்தின் படி, 7 முதல் 8 வருடங்களுக்கு இந்த உற்பத்தி நிலையம் கட்டமைக்கப்படும். இந்த நிலையத்தில், மஹிந்திராவின் பார்ன் எலக்ட்ரிக் வெகிகிள்ஸ் (BEV) மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த வாகனங்கள், […]

வாகனத் துறையில், இந்தியாவின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா, புனேவில் மின்சார வாகன உற்பத்தி நிலையம் அமைக்க உள்ளது. இதற்காக, 10000 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளது. இது, மகாராஷ்டிரா மாநில அரசின், தொழில் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட திட்டம் ஆகும்.

இந்தத் திட்டத்தின் படி, 7 முதல் 8 வருடங்களுக்கு இந்த உற்பத்தி நிலையம் கட்டமைக்கப்படும். இந்த நிலையத்தில், மஹிந்திராவின் பார்ன் எலக்ட்ரிக் வெகிகிள்ஸ் (BEV) மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும். இந்த வாகனங்கள், கடந்த ஆகஸ்ட் மாதம், பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட்ஷிரில் காட்சிப்படுத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து பேசிய மஹிந்திரா நிறுவனத்தின் செயல் நிர்வாகி ராஜேஷ் ஜெஜூரிகர், “இந்த திட்டத்தின் மூலம் இந்தியாவின் மின்சார வாகன மையமாக மகாராஷ்டிரா மாநிலம் மாறும்” என்று கூறியுள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu