அமெரிக்காவின் பிரபலமான ஊடகமாக பஸ்ஃபீடு (BuzzFeed) நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போது, இந்த நிறுவனத்தில் பணி நீக்கம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஜோனா பெரட்டி, நிறுவனத்தின் 15% பணியாளர்களை நீக்க உள்ளதாக அறிவித்துள்ளார். அத்துடன், நிறுவனத்தின் ‘செய்திகள்’ பிரிவை முழுமையாக நிறுத்தப் போவதாக தெரிவித்துள்ளார். பஸ்ஃபீடு செய்திகள் தளம் இணையத்தில் மிகவும் பிரபலமானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்த அறிவிப்பு பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பஸ்ஃபீடு நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி, நிறுவனத்தின் பணியாளர்களுக்கு அனுப்பிய செய்தியில் இந்த தகவல்கள் இடம்பெற்றுள்ளன.