மாலத்தீவில் அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடையாது

September 11, 2023

மாலத்தீவில் அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 2-வது சுற்று தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது. நேற்று மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் 2-வது முறையாக போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் முகமது முயிஸ் உள்பட 8 பேர் வேட்பாளர்களாக தேர்தலில் களம் இறங்கினர். வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குகள் உடனே எண்ணப்பட்டன. மாலத்தீவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுகள் பெற […]

மாலத்தீவில் அதிபர் தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் 2-வது சுற்று தேர்தல் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

நேற்று மாலத்தீவில் அதிபர் தேர்தல் நடந்தது. இதில் அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் 2-வது முறையாக போட்டியிடுகிறார். பிரதான எதிர்க்கட்சி வேட்பாளர் முகமது முயிஸ் உள்பட 8 பேர் வேட்பாளர்களாக தேர்தலில் களம் இறங்கினர். வாக்குப்பதிவு முடிந்ததும், வாக்குகள் உடனே எண்ணப்பட்டன. மாலத்தீவில் அதிபர் தேர்தலில் வெற்றி பெற ஒரு வேட்பாளர் 50 சதவீதத்துக்கும் மேல் ஓட்டுகள் பெற வேண்டும்.

அதிபர் இப்ராகிம் முகமது சோலிக், முகமது முயிஸ் இடையே கடும் போட்டி நிலவி நிலையில், தேர்தலில் எந்த வேட்பாளருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. வேட்பாளர்களில் யாரும் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெறவில்லை. பிரதான எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் முகமது முயிஸ் 46 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார். அதிபர் இப்ராகிம் முகமது சோலிக் 39 சதவீத வாக்குகள் பெற்றார். இதனால் தேர்தலில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து 2-வது சுற்று தேர்தல் இம்மாத இறுதியில் நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu