உடல் பராமரிப்பு சார்ந்த பல்வேறு பொருட்களை தயார் செய்யும் பிரபல நிறுவனமான மாமாஎர்த் பொதுப்பங்கீட்டுக்கு வெளியாக உள்ளது. வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 2ம் தேதி வரை, மாமாஎர்த் நிறுவனம் பொதுப்பங்கீட்டை வெளியிடுகிறது. அப்போது, நிறுவனத்தின் ஒரு பங்கு 308 ரூபாய் முதல் 324 ரூபாய் வரை விற்கப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த பொது பங்கீட்டின் மூலம், 1701 கோடி ரூபாய் நிதி திரட்ட மாமாஎர்த் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த பொது பங்கீட்டில், புதிதாக 365 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் வெளியிடப்படுகின்றன. மேலும், 4.12 கோடி பங்குகள் சலுகை விலையில் விற்கப்படுகின்றன. ஒரு லாட்டுக்கு 46 பங்குகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன. ஹோனாசா ஊழியர்களுக்கு 30 ரூபாய் சலுகையில் பங்குகள் விற்கப்பட உள்ளன. மேலும், ஹோனாசா ஊழியர்களுக்கு பிரத்தியேகமாக 10 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. பொது பங்கீடு முடிந்து, நவம்பர் 10ஆம் தேதி வாக்கில், பங்குச் சந்தையில் மாமாஎர்த் பட்டியலிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.